{"title":"KAVITHAIGAL | கவிதைகள்","description":"","products":[{"product_id":"aadhmanaam-kavithaikal","title":"ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள் | AATHMANAM THERNTHEDUTHA KAVITHAIGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e                                                                                        - சுகுமாரன்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e                                                                                        - யுவன் சந்திரசேகர்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475332347,"sku":"","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/61090269bf1a960a2fa8121317dd17ac.jpg?v=1705049475"},{"product_id":"agnar","title":"அஞர் | ANJAR","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபோரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதை இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப் போராட நம்மைத் தூண்டுகின்றது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479100667,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/722b4d83eaeed5d10775d0bc565d0663.jpg?v=1705734892"},{"product_id":"anjanak-kanni","title":"அஞ்சனக்கண்ணி | ANJANAK KANNI","description":"\u003cdiv class=\"row d-flex justify-content-center\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"col-lg-9 col-12\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"product__info__detailed\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"tab__container\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"pro__tab_label tab-pane fade show active\" id=\"nav-about\" role=\"tabpanel\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"description__attribute\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eகவிஞர் என்ற தொழில்நெறியாளர் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களைக் கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறார். இயற்கைக்கு மிக அருகிலிருக்கும்போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன. -ஷங்கர்ராமசுப்ரமணியன் ‘அவ்வளவு பெரிய மலைகளைப் பார்க்கும் சின்னக் கண்களுடன்’ சஹானாவாக வேண்டும்; அன்றாடங்களின் வழமைகளை உதறி சஹானாவைப்போல ஒரு மீனாக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகின்றன இத்தொகுப்பைப் படித்தால். சூழலியலுக்கும் சஹானாவுக்கும் ‘பூனையின் மீசை’ அளவுக்குக்கூட இடைவெளி இல்லை. எல்லாமுமாக அவள் மாறிப்போவது அற்புதமாக இருக்கிறது. சஹானாவின் கவிதைகள் வழியாகக் கேட்பது பலநேரம் ஒரு குழந்தைமையின் தூய இசைக்குரல், சிலநேரம் தேர்ந்த தாயின் மெல்லிய கேவல். உண்மையில் சஹானாவின் அந்தச் சின்னக் கண்கள் வழியாக இந்தப் பெரிய வாழ்க்கையை, இயற்கையைப் பார்க்க வேண்டும். இன்னும் நிதானமாக ஒரு பூனையைப்போல வாசிக்க வேண்டும் மறுபடியும்... மறுபடியும்... -சந்தோஷ் நாராயணன் - ஓவியர்\u003c\/p\u003e\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"wn__related__product ft__content\" data-mce-fragment=\"1\"\u003e\n\u003cdiv class=\"section__title text-center pt--50\" data-mce-fragment=\"1\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165482606843,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/026e1edf4bdb974ece6ae056ca3efb54.jpg?v=1705734194"},{"product_id":"anru-veru-kizhamai","title":"அன்று வேறு கிழமை | ANRU VERU KIZHAMAI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன் கவிதைகள் இருக்கின்றன. வெளிவந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் ‘அன்று வேறு கிழமை’ சமகாலப் பொருத்தமுடைய கவிதைகளின் தொகுப்பாகவே படுகிறது. புதுப்புது அபத்தங்களைத் தரிசித்துக்கொண்டிருப்பதும் அதன் எதிர்வினையை இந்தக் கவிதைகளில் காண முடிவதும்தான் காரணமாக இருக்குமோ?\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165482672379,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/60fe1c4df29be528e6ed986567a2440f.jpg?v=1705468804"},{"product_id":"anthiyil-thigalvathu","title":"அந்தியில் திகழ்வது | ANTHIYIL THIGALVATHU","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதான் எதிர்கொள்கிற கணங்களில் ஒளிந்திருக்கும் வேறொன்றை அத்துணை ஆசையோடு கண்டடையும் இக்கவிதைகள், நழுவும் அழகிற்காகவும் தருணத்து உண்மைக்காகவும் விழிப்புடன் தன்னைத் திறந்துவைக்கின்றன. இயற்கையின் முன்னமர்ந்து மானுட மனம் எப்படியெப்படியெல்லாம் பையப் பைய குணமடைகிறது? அப்பாலும் இப்பாலும் ஒன்றையொன்று எந்த அளவுக்குச் சார்ந்துள்ளன? பார்த்தல் எனும் உயிர்ச்செயல்பாடு பிரார்த்தனைக்கும் ஊழ்கத்திற்கும் எப்புள்ளியில் இணை என்றாகிறது? போன்றவற்றை அணுக்கமாக உணர்த்துவதன் மூலம் ஓர் அடர்ந்த சாயங்காலப்பொழுதின் பரவசத்தை, தொலைவை, இன்னொரு உலகத்தன்மையை, விடுதலையை,  மோனத்தை என யாவற்றையும்அளிக்கும் கவிதைகள் இவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483163899,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/064a92d72c9b576efdadb17277d13412.jpg?v=1705734112"},{"product_id":"apoorva-manithargal","title":"அபூர்வ மனிதர்கள் | APOORVA MANITHARGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுதந்திரமான போக்கில் எழுதப்பட்டவை இவை. இந்த புனைவல்லாத எழுத்துக்களின் சிறப்பு, அவை முற்றிலும் மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பேசுபொருளாகக் கொண்டவை என்பதே. இதில் இடம்பெறும் மனிதர்கள் பெரும்பாலும் விசித்திரமானவர்கள் அல்லது அவர்களுக்கு வாய்க்கும் சூழல் விந்தையானது. இந்த விசித்திரர்கள் இயல்பான நடைமுறையை எப்படி விநோதமானதாக மாற்றுகிறார்கள் என்றும் விந்தையான சூழல், எளிய மனிதர்களை எவ்வளவு அபூர்வமானவர்களாக மாற்றுகிறது என்றும் நெருங்கியும் விலகியும் பார்த்து நுட்பமாக தீட்டுகிறார் ஜானகிராமன். அவரது புனைகதைகள் தரும் வாசிப்பு இன்பத்தை இந்த புனைவல்லாத எழுத்துக்களும் அளிக்கின்றன. இவை அவரது கலை மேதமையின் சான்றுகள் கூட.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483229435,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a9bd01e9b71808ae8c9771eb5eb923f4.jpg?v=1705502816"},{"product_id":"aruntha-kadhin-thanimai","title":"அறுந்த காதின் தனிமை | ARUNTHA KAADHIN THANIMAI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎமிலி டிக்கன்ஸன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கும் கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவையோடு, கவிதைப் பாத்திரங்களாக அலையும் கடையைப் பூட்டிவிட்டு, தொல் தமிழ் மரபின் நூலிழைகள் பழுப்பேறிய துண்டை உதறித் தோளில் இட்டுக்கொண்டு வெளியேறும் ந. ஜயபாஸ்கரனின் சித்திரம், இக்கவிதைகளில் சன்னமாகத் தெரிகிறது. கடையிலிருந்து வெளியேறும்போது, வான்கோவின் மஞ்சளை உடன் எடுத்துச் செல்கிறார் ஜயபாஸ்கரன். கடையில் அறையப்பட்ட இருப்பில், தான் புதைந்து நசிவதையும், கடையின் இருளையே கர்ப்பத்தின் பாதுகாப்பாக்கி ஒசிந்து ஒத்து ஒழுகுவதையும், நமது தனிப்பட்ட பிரபஞ்சங்களின் சாயலோடு அடையாளம் காணச்செய்ததுதான் ஜயபாஸ்கரனின் சாதனை. கடை, தன்னைப் பூட்டிக்கொண்டு ஜயபாஸ்கரனை வெளியேற்றிவிட்டது. ஜயபாஸ்கரன் உருவகித்து வைத்திருந்த சின்னஞ்சிறு தனிப்பிரபஞ்சம், இத்தொகுப்பில் உள்ள உரைநடைக் கவிதைகள் வழியாக நீட்சியையும் நிறையையும் அடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்க முயன்று, அதன் கர்ப்பப் பாதுகாப்பிலிருந்தும் வெளியேறி ‘நவீன’ கவிஞனாக, நெடுங்காலத்துக்குப் பின்னர் உணர்ந்து, காலை எட்டிவைத்து இன்னொரு பயணம் தொடங்கியவனின் கதை இந்தக் கவிதைகள்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165484703995,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/c754e5ca353f7cf3437931930f1be691.jpg?v=1705468719"},{"product_id":"asakava-thaalam","title":"அசகவ தாளம் | ASAKAVA THAALAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇன்று வாழ்வை முழுநேரமும் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்கு\u003c\/span\u003e\u003cwbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eம் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை. சில இடங்களில் படிமங்களாக, உருவங்களாக, சில இடங்களில் அகச்சிக்கல்களாக, இன்னும் சில இடங்களில் சிந்தனைகளாகத் தேங்கிவிட்ட ஞாபகங்களை அன்றாட வாழ்க்கையில் வைத்து அர்த்தம் தேடும் முயற்சியை பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகள் கச்சிதமாகவே செய்கின்றன. தன்னிச்சையாகத் தோன்றும் சிறுசிறு வியப்புகளையும் நெகிழ்வான, எளிமையான மொழியின் மூலம் கூறிச்செல்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். இவற்றைக் குழந்தைமையின் அழகியலோடும் அதேசமயம் அப்பட்டமான குரூரங்களோடும் உலகைக் காணவிரும்பும் ஒருவனின் படைப்புகள் என்று குறிப்பிடலாம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165484769531,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4179d3c5d578e1f4ca9b3b3e3f3c1fa1.jpg?v=1705468490"},{"product_id":"chevvaikku-marunal-anaal","title":"செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல | SEVVAIKKU MARUNAL, ANAAL PUTHANKILAMAI ALLA","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003e“கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய விசாரணையா? கவிதை, மொழியின் துணைப்பண்டமா, உற்பத்தியின் மூலமா? கவிதையின் மொழி வெளிப்படையானதா, தொனிவேற்றுமை கொண்டதா? கவிதைக்குள் இயங்கும் பார்வை மோஸ்தருக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமா? அதைப் புறக்கணிக்கும் ஒன்றா? கவிதை செய்திக்கான வாகனமா, தனி இருப்பா? கவிதை கைப்பழக்கமா, மனக்கனிவா? கவிதை என்னவாக இருக்க வேண்டும், கவிதையைப் போலவா அல்லது கவிதையாகவா? கவிதையெழுத்துத் தொடங்கிய காலம்முதல் உறுத்திவந்த கேள்விகள் இவை. எல்லாக் காலத்திலும் அவற்றுக்கான பதில்களைத் தேடியிருக்கிறேன். எங்கே, எப்படி என்ற பெரும் கேள்விகளுக்கு இங்கே, இந்தக் கவிதைகளில் என்பதே பதில்.வெளிச்சத்தை அதிக வெளிச்சத்தால் முறியடிப்பதுதானே கவிதையின் வேலை.”\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165489094907,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/d59e96793cfca5c2f4afb62b8186d6e8.jpg?v=1705732445"},{"product_id":"engal-mannum-indha-natkalum","title":"எங்கள் மண்ணும் இந்த நாட்களும் | ENGAL MANNUM INDHA NAATKALUM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபாரம்பரியமான கவியரங்குகள் மலினப்பட்டுப் போன சூழலில் அதற்கு ஒரு மாற்றாகவும் ஒரு பரிசோதனை முயற்சியாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கவிதா நிகழ்வை நான் அறிமுகப்படுத்தினேன். ‘அரசியல் கவிதைகள் - ஒரு கவிதா நிகழ்வு’ என்ற தலைப்பில் முதலாவது கவிதா நிகழ்வு 1981இல் சுமார் முப்பதுபேர் கொண்ட ஒரு சபையில் அரங்கேறியது. எனது நண்பார்கள் என். சண்முகலிங்கம் மௌனகுரு சேரன் ஆதவன் முதலியோர் நிகழ்வில் பங்கேற்றனர். என் வேண்டுகோளுக்கு இணங்க அரசியல் கவிதைகள் பற்றி கைலாசபதி ஓர் அறிமுக உரையாற்றினார். ஒற்றைக் குரலில் அன்றி பல்குரலில் கூட்டாகவும் தனியாகவும் சற்று நாடக பாணியில் கவிதைகளை அவைக்கு ஆற்றிய அந்நிகழ்ச்சி மிகுந்த தாக்க வலு உடையதாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ‘பாரதி கவிதைகள் - ஒரு கவிதா நிகழ்வு’ ‘பலஸ்தீனக் கவிதைகள் - ஒரு கவிதா நிகழ்வு’ ஆகிய இரு நிகழ்வுகளை நான் தயாரித்து அரங்கேற்றினேன். இவற்றில் நான் முன்குறிப்பிட்டவர்களோடு வேறு சில மாணவர்களும் பங்கேற்றனர். இம் மூன்று நிகழ்வுகளினதும் வெற்றி கவிதா நிகழ்வு ஒரு புதிய கலாசார இயக்கமாக பல்வேறு இயக்கங்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதில் இசை போன்ற பல புதிய ஜனரஞ்சகமான அம்சங்களையும் அவர்கள் சேர்த்தனர். பல்வேறு கவிதா நிகழ்வுகள் அரங்கேறின. அவ்வகையில் உருவான மிகப் பிரபலமான வடக்கில் கிராமங்கள் தோறும் அறுபது தடவைகளுக்குமேல் அரங்கேற்றப்பட்ட ‘எங்கள் மண்ணும் இந்தநாட்களும்’ என்ற கவிதா நிகழ்வின் எழுத்துப் பிரதி சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அச்சுருவில் வெளிவருகின்றது. மிகக் கரிசனையுடன் இப்பிரதியைத் தேடி எடுத்து அருமையான விரிவான ஒரு முன்னுரையுடன் நண்பர் பா. அகிலன் இதைப் பதிப்பித்துள்ளார். கவிதாநிகழ்வு என்றால் என்ன என்பதை அறியாத பலருக்கும் அதுபற்றி இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது. கவிதையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஒரு சிறந்த சாதனமாகக் கவிதா நிகழ்வைப் பயன்படுத்துவதற்கும் இந்நூல் ஆதர்சமாக அமையும் என்று நம்புகின்றேன். எம். ஏ. நுஃமான்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165492699387,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b1e0664bf698cb9c163063c97f897cd6.jpg?v=1705731903"},{"product_id":"gyanak-kuthan-kavithaigal","title":"ஞானக்கூத்தன் கவிதைகள் | GNANAKOOTHAN KAVITHAIGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494894843,"sku":"","price":895.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/dc58662f735037aa81c30a6a4b11b64f.jpg?v=1705499032"},{"product_id":"innorumurai-santhikka-varumpothu","title":"இன்னொருமுறை சந்திக்க வரும்போது | INNORUMURAI SANTHIKKA VARUMPOTHU","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட்களில் ஒருங்கே எழுந்தன. அதற்கு முகாந்திரமான சம்பவங்களைக் கண்டு அனுபவிக்கவும் நேர்ந்தது. இந்த இருநிலை உணர்வுகளும் கவிதைகளில் தொனிக்கின்றன, பெருமிதம் அதிகமாகவும் அருவருப்பு குறைவாகவும்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496041723,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/cc69ec7b04f47a14e0bb6deb5bc723a6.jpg?v=1705498611"},{"product_id":"ippadikku-eevaal","title":"இப்படிக்கு ஏவாள் | IPPADIKKU EEVAAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசுகிர்தராணியின் ஆறாவது தொகுப்பு இந்நூல். தனது முந்தைய ஐந்து தொகுப்புகளிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வீச்சுடன் முன்னேறிச் சென்றிருக்கும் சுகிர்தராணி ‘இப்படிக்கு ஏவா’ளில் உச்சத்தை எட்டியிருக்கிறார். அதைவிடவும் அதிஉச்சத்தை எட்டும் கவிதைகள் வரக்கூடும் என்ற நன்னம்பிக்கையையும் இந்தத் தொகுப்பு முன்னறிவிக்கிறது. மையப் பொருளிலும் சொல்லும் மொழியிலும் பார்க்கும் கோணத்திலும் வித்தியாசத்தையும் செறிவையும் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு இது. காதலின் மென்மையையும் காமத்தின் வன்மையையும் தாய்மையின் கசிவையும் தந்தைமையின் நெகிழ்வையும் மகளின் ஆதுரத்தையும் தோழமையின் இணக்கத்தையும் பகை முடிக்கும் சீற்றத்தையும் போராளியின் முழக்கத்தையும் செயல்பாட்டாளியின் கருணையையும் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு. உணர்வின் தீர்க்கமும் அறிவின் மின்னலும் இந்தக் கவிதைகளில் இரண்டறக் கலந்திருக்கின்றன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496205563,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/cd0ba2b8743831b28ad07f7783f68432.jpg?v=1705498526"},{"product_id":"iravu-mirugam","title":"இரவு மிருகம் | IRAVU MIRUGAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபோலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார் சுகிர்தராணி. ‘எட்ட நின்று குச்சியால் கிளறுவதே’ வாசிப்பு என நம்பிக்கொண்டிருப்பவர்களைக் கிலி கொள்ளச் செய்யும் இக்கவிதைகள், முன் முடிவுகள் இல்லாமல் அணுகுவோரை வாஞ்சையோடு வரவேற்கின்றன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496402171,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/d117e4592bfaf724c03f4d5569051ca9.jpg?v=1705498135"},{"product_id":"jinnin-iru-thokai","title":"ஜின்னின் இரு தொகை | JINNIN IRU THOKAI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅகத்தின் மாயச் சூழல்கள் கவிதை களாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாக வும் மாந்திரிக வனப்புமிக்க சொற்க ளாகவும் அனாரின் புதிய காட்சிப் படிமங்களாலும் சாதாரணமாய்ப் பிடிபடாத உருவகங்களாலும் நம்மைத் தொடர்ந்தும் ஈர்த்துக்கொண்டிருக்கின்றன அவருடைய கவிதைகள். சேரன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496729851,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a8522a6d0acc34ff71c39b7b262523b0.jpg?v=1705729998"},{"product_id":"kamatthi-poo","title":"காமத்திப்பூ | KAMATTHI POO","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதுளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவு கண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்த சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது. இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது. பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500432635,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/6690625f20c615fd36ecfd5226f78b1f.jpg?v=1705496540"},{"product_id":"kannadi-saththam","title":"கண்ணாடி சத்தம் | KANNADI SATHTHAM","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉருவமற்ற ஒன்றுக்கு உருவத்தை அளிக்கும் எத்தனம் செல்வசங்கரன் கவிதைகளின் தனி இயல்பு. மாபெரும் உலகத்தின் ஓட்டத்தைச் சிறுகல்லை எறிந்து நிறுத்த முயலும் தீவிர பாவனை, புழங்கும் வாழ்விடத்தைத் தூக்கி விட்டு மற்றொன்றை வைக்கும் பித்துக்குளித்தனம், காட்சிகளைக் குலைக்கும் விபரீதம் இவற்றால் ஆன விளையாட்டே இந்தக் கவிதைகளின் இயக்கம். \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபுதிய தலைமுறைக் கவிஞர்களில் தனதான குரலும் பொருளும் கொண்ட செல்வசங்கரனின் ஐந்தாவது தொகுப்பு ‘கண்ணாடி சத்தம்\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500760315,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/954eef5118ea373b37c0bbb19a579406.jpg?v=1705491648"},{"product_id":"mayanaththil-nirkkum-maram","title":"மயானத்தில் நிற்கும் மரம்  | MAYANATHTHIL NIRKKUM MARAM","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507510523,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/61IdMPGGopL._SY425.jpg?v=1708676369"},{"product_id":"mootche-narumanamanaal","title":"மூச்சே நறுமணமானால் அக்கமகாதேவி | MOOTCHE NARUMANAMANAAL AKKAMADEVI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமகாதேவியின் உடலைத் தற்பொழுதிற்கென மறைத்துக் காட்டும் கூந்தல் குழல்களாய், பரந்து விரிந்த வானாய், இடைவெளியின்றி நிறைந்திருக்கும் இறையைச் சட்டெனச் சுட்டிவிடும் தெளிவாய்த்  துலங்கி மிளிர்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507936507,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/e43ec7b472d01a8b563ea95d3a1b9149.jpg?v=1705725586"},{"product_id":"nagulan-therndhedutha-kavithaikal","title":"நகுலன் - தேர்ந்தெடுத்த கவிதைகள் | NAGULAN THERNTHEDUTHA KAVIDHAIGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப் பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது. - யுவன் சந்திரசேகர் நகுலனின் உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்ற வில்லை. அதுமட்டுமல்ல, எல்லோரும் தனக்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் போது, நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கவிதையில் மட்டுமல்ல. அவருடைய நாவல்களிலும் இதைத் தொடர்ந்தார். அந்த வகையில் தமிழின் தனித்துவமிக்க இலக்கியவாதி அவர். நகுலன் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின் சுடரை யாராலும் தொட முடியாது. சுகுமாரன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509542139,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/d2130ad52bfa74e19f029bdba9f28deb.jpg?v=1705295032"},{"product_id":"neer-valar-aampal","title":"நீர் வளர் ஆம்பல் | NEER VALAR AAMPAL","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510230267,"sku":"","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/07396781685dd4fe5ab25034700a1047.jpg?v=1705675288"},{"product_id":"orutthi-kavithaigalukkum-iravukalukkum","title":"ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது | ORUTHI KAVITHAIGALUKKUM IRAVUKALUKKUM THIRUMBIKIRAPOZHUTHU","description":"\u003cp\u003e\u003cspan\u003eஅன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின் மௌனம் என யாவற்றையும் கொண்டவை இக்கவிதைகள். சுடரின் அசைவைப்போல நளினமும் ஒளியும் ஒருசேர நிகழும் அபூர்வ கணங்களையும் கொண்டவை. எளிய சொற்களைச் சோழிகளாக்கிச் சுழற்றி வீச அவை நவமணிகளாகும் ஜாலத்தை பொன்முகலியின் மொழியில் காணமுடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165512556795,"sku":"","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/89e244b708ca3f2cf441cae5363f795a.jpg?v=1705387889"},{"product_id":"paazh-vattam","title":"பாழ் வட்டம் | PAAZH VATTAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநவீன வாழ்வின் இயல்பான காட்சி பிம்பங்களைக் கவிதைக்குள் புகுத்துகையில் அச்சொற்கள் ஒரு மாயக் கணத்தைக் கண்டடைகின்றன நந்தாகுமாரனின் கவிதைகளில். நந்தாகுமாரனின் பிரவாகமான கவிதை மொழி சில கவிதைகளில் பிரவாகத்தை நிறுத்தித் தத்தளிப்பையும் பகடியையும் கைமாற்றுகிறது. வாரி இறைக்கப்படும் சொற்களுக்கு மத்தியிலும் கவிதையின் தருணங்கள் கூடுகின்றன. கவிதையொன்று கவிதையாகாமலிருப்பதன் பின்னணியையும் நந்தாவின் கவிதை மொழி விசாரிக்கிறது. இத்தொகுப்பின் தனித்துவமாக இவ்விசாரணையைக் காணமுடியும்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165513965819,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/59c8289861c978c384446b4d4d0a471a.jpg?v=1705298747"},{"product_id":"pa-venkatesan-kavidhaigal","title":"பா. வெங்கடேசன் கவிதைகள் | PA.VENKATESAN KAVIDHAIGAL","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165516030203,"sku":"","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/pa-venkatesan-kavithaigal_FrontImage_558.jpg?v=1708679061"},{"product_id":"plak-plak-plak","title":"ப்ளக் ப்ளக் ப்ளக் | PLAK PLAK PLAK","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகவிதை சட்டென்று பிறக்கிறது ஒரு செடியைப்போல. காற்றில் எந்தப் பக்கமும் அசைவதுபோல், கவிதை நகர்கிறது. கற்பனையாக, காட்சியாக, மனசாட்சியாக, தனித்து அலையும் பைத்தியத்தின் காலடியாக, குற்ற உணர்வாக! உருவகமாகவும் படிமமாகவும் அமையும் இக்கவிதைகள், எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தெளிவாகச் சொல்கின்றன, எளிமையாகவும் பூடகமாகவும். கூழாங்கல்லாக மாற விரும்பும் ஒரு பைத்தியத்தின் சின்னஞ்சிறு புன்னகையே இக்கவிதைகள்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165516816635,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/7e343c6fe1d72bab4f5e9213540f7dc9.jpg?v=1705670773"},{"product_id":"pramil","title":"பிரமிள் | PRAMIL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎம். யுவன்: படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. அதில் நான்கு வரிகளில் முழுமையான ஒரு படிமம் இருக்கிறது. அவ்வரிகளில் எளிமை இருக்கிறது. அழகு இருக்கிறது. சாந்தம் இருக்கிறது. இம்மாதிரியான கவிதைகளை எழுதிய பின்னர் எப்படி சிடுக்கான கவிதைகளுக்குப் போக முடிந்தது என்ற ஆச்சரியம் எனக்கு இருக்கிறது. சுகுமாரன்: பிரமிளின் தனி ஆளுமை அல்லது கவி ஆளுமை என்பதே சிடுக்கானது. அது இலகுவாக இருக்கும் கணத்தில்தான் ‘காவியம்’ போன்ற கவிதைகள் உருவாகின்றன. இன்னொரு கவிதை ‘எல்லை’. அதில் நேரடியான இரண்டு படிமங்கள் இருக்கின்றன. எரிந்து கருகும் விறகு, அதிர்கிற தந்தி ஆகிய இரண்டு படிமங்களின் இயக்கமாகவே கவிதை முன்னேறுகிறது. கவிதையில் பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. சிடுக்குகளும் கிடையாது. அப்படியானதொரு மனோநிலை தொடர்ந்து பிரமிளுக்கு இருக்கவில்லை என்று நினைக்கிறேன். (பிரமிள் குறித்த உரையாடலிலிருந்து)\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165517963515,"sku":"","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/fc9edbb959110dfc14c5ef6a009ee06a.jpg?v=1705670488"},{"product_id":"ravikkai-sugandham","title":"ரவிக்கைச் சுகந்தம் | RAVIKKAI SUGANDHAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஜான் சுந்தரின் பியானோ வெட்கமில்லாதது. ஆனால் அவர் சமதளப் படிகளில் இறங்கும் வித்தை தெரிந்த பியானோக் கலைஞன். பேருந்தில் நம் மடியிலிருக்கும் மரக் கன்றைத் தயங்கித் தொடும் சிறுமி, ஒரு கணத்தில் அவளைத் தொடத் தளிர்க் கை நீட்டும் மரக்கன்று இரண்டும் அவர். சடுதியில் ஐந்து மார்புகள் முளைக்கும் பெண்ணின் சித்திரம் அவர் நடுச் சுவரில் வரைந்த ஒன்று. கணத்தைப் புழுதியில் புரட்டித் தின்னத் தரும் அவருடைய வரிகள் அந்தரவெளிகளில் செபியாவைத் தேடுகின்றன. இது அவருடைய செபியா நிறச் சொந்த ரயில். செபியா நிற பிஸ்கட் நிலா. செபியா நிறச் சுகந்தம். மற்றும் செபியா நிறச் செபியா. -கல்யாண்ஜி * தனித்திருப்பவனின் காதில் திடீரென விழுந்து சூழலை மாற்றும் தேன்சிட்டின் கூரிய கீச்சொலிகள் போல, வாசிப்பவரின் எல்லாப் புலனுக்குள்ளும் நுழைந்து நலம் விசாரித்து அமைதி படர்த்தும் கவிதைகள் இவை. அப்படியொரு கனவமைதிக்குள் ஆழும் போது, காகங்களின் மரண கானா போல மனம் பேதலிக்கச் செய்பவர்கள், ஜான்சுந்தரின் கவிதை மனிதர்கள். தானியங்கிப் பண இயந்திரங்களைக் கிழட்டு பூதங்கள் என நெருப்பாய் பெரு மூச்சுகள் விட்டபடி காவல் காக்கும் முதியவர்கள், பதறப்பதற பொதியை வாங்கிக் கனலை அணிந்து பறக்கும்,பசிப்பிணி தீர்க்கும் சிறு தெய்வங்களான ஸ்விகிப் பையன்கள், நாலங்குல பிரஷ்ஷால் சுவர்களில் வர்ணம் பூசி டர்பன்டைனில் வாழ்வைக் கழுவிக்கொள்பவர்கள் என, உப்புக்கடலை ரப்பைக்குள் ஒளித்து வைக்கும் கவிதை மனிதர்கள் நம் மன அமைதியைக் குலைப்பவர்களும் கூட. ஏதிலிகளின் ஆண்டவர் தன் முன் பிரார்த்திக்கும் எளிய ஜனங்களின் வார்த்தைகள் அனைத்தையும் இந்தக் கவிஞனின் நாவில் தோன்றச் செய்திருக்கிறார். அவை சாரங்கி வில்லின் இசைக்கு முன் தோளுயர்த்தி எதிர்க்கிறவனைத் தோற்று அழச் செய்பவை. சில கணங்கள் பொறுத்தால் அழுகையை வெல்ல தீ காய்ச்சப்படும் அவரது பறையில் இசையாயும் துடித்தெழும். கடக்கும் ஒவ்வொரு இறந்த கணமும் நிகழ்வுகளை கறுப்புவெள்ளை நினைவுகளாக்குவதை செபியா டோன் படங்களாக்கி காலாதீதம் தாண்ட செபியா குதிரையேறும் ஜான் சுந்தர், ஒலிவாங்கியை அரங்கம் ருசிக்கும் ஐஸ்க்ரீமாக்கும் தேர்ந்த இசைஞனும் கவிஞனுமாகயிருப்பது தமிழின் கொடுப்பினை. – கலாப்ரியா\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165519667451,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/52574e3036f1fae885557e151309a907.jpg?v=1705475910"},{"product_id":"saimana-veliccham","title":"சாய்மான வெளிச்சம் | SAIMANA VELICHAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதனிமை சூழ்ந்த வாழ்க்கையாலும், தனித்தன்மை வாய்ந்த கவிதை மொழியாலும் அறியப்படுபவர் அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன். இயற்கை, காதல், காலம், மரணம், இறவாமை - என்னும் புள்ளிகளில் இடையறாது சலிப்பவை அவரது கவிதைகள். அவர்மீது கொண்ட காதல் மட்டுமே தனது தகுதி என்று சொல்லும் ந. ஜயபாஸ்கரன், எளிமையாகத் தோற்றமளிக்கும் 71 கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165520290043,"sku":"","price":140.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/140260ac518aac51423bece42d951fe0.jpg?v=1705667099"},{"product_id":"siriya-iragukalin-thisaigal","title":"சிறிய இறகுகளின் திசைகள் | SIRIYA IRAGUGALIN THISAIGAL","description":"\u003cstrong\u003eஎல்லாவிதத் தேடல்களுக்கும் பிறகான பூரண அமைதியில் மனங்கடத்தும் தனித்த சந்தோஷத்தின் மிருது லயத்தையும், அதன் தீவிரத்தன்மையின் அழகியலையும் எல்லாவழிகளிலும் கைவிடப்பட்டிருக்கும் உணர்வுகளினாலான வலிகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பவை இச்சொற்கள். மேலும் அம்மனதிற்கு மிகநெருக்கமான உலகமொன்றையும் அதன் பற்றற்றத் தன்மைகளின் எண்ணற்ற சாத்தியப்பாடுகளையும் ஒரு ஆழத்தில் இவை மறைத்தும் வைத்திருக்கின்றன. வாழ்வின் ஆகச் சிறந்தவற்றின் ஒளியை சிறு புதிர்களாகச் சொற்களில் கொண்டிருப்பவை இந்நூலின் கவிதைகள்.\u003c\/strong\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165523042555,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b594e299ebfdbc561778c18f4674ac47.jpg?v=1705306566"},{"product_id":"sonnathayellam-thirumpa-edutthukolkiren","title":"சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன் । SONNATHAYELLAM THIRUMPA EDUTTHUKOLKIREN","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165523337467,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/FullSizeRender_dcb38d31-218a-47a6-8b4b-4bc883faed32.jpg?v=1708947132"},{"product_id":"sugirtharani-kavithaigal","title":"சுகிர்தராணி கவிதைகள் | SUGIRTHARANI KAVITHAIGAL","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165523665147,"sku":"","price":375.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a23cdd04b4ee394631968879fcce49e4.jpg?v=1705664107"},{"product_id":"sugumaran-kavithaigal","title":"சுகுமாரன் கவிதைகள் (1974 - 2019) | SUGUMARAN KAVITHAIGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003e‘இருப்பிலிருந்து இன்மைக்கும், இன்மையில் இருந்து இருப்புக்கும்’ இடையில் யாத்திரை நிகழும் நெடுந்தெருவின் மோதல்களத்தில் சுகுமாரனை நாம் இடைவிடாமல் சந்திக்கின்றோம். வாழ்க்கை குறித்த அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்றோடொன்று முரண்பட்டுக்கொள்ளும் வெவ்வேறு கோணங்களிலிருந்து வாழ்க்கையைப் பரிசீலிக்கும் பலவித சித்தாந்தங்கள் அவர் கவிதைகளில் இடைவிடாமல் ஊடாடுகின்றன. அவை அவரது கவிதைகள் சிலவற்றில் கடவுளின் இறப்பைப் பிரகடனஞ் செய்ய, வேறு சிலவற்றில் ‘கடவுளைக்’ கடந்து உள்ளுறையும் ஒரு சித்தாகக் காண, இன்னும் சிலவற்றில் கடவுளை மலம் அள்ளுபவராக ஆக்கியுள்ளன. இந்த எந்தவொரு தனிச் சித்தாந்தக் கட்டுக்குள்ளும் சிக்காத, அவற்றை ஊடறுத்து அவர் செய்யும் யாத்திரைகள் அவரை ஒரு மெய்யான பயணியாகவும், ஒரு பரதேசிக்கான அடிப்படைகளைக் கொண்டவராகவும் ஆக்குகின்றன. ஆன்மீகம் என்பது சுயத்தை அதன் பல பரிமாணங்களிலும் புரிந்துகொள்ளும் பயணமாயின், சுகுமாரனின் கவித்துவ மூலத்தை ஆன்மீகம் என்று உரைக்க விரும்புவேன். பா. அகிலன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165523697915,"sku":"","price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/9e0c6a688d24cf84ec362b04ba1e5b10.jpg?v=1705473074"},{"product_id":"thaanumanaval","title":"தானுமானவள் | THAANUMANAVAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும். அழகும் பரந்து விரிந்துள்ளன. இப்போது அவருக்கு வாய்த்திருப்பவை பதற்றம் குறைந்த நாட்களில் தீர்க்கமாக வீசும் தடைகளற்ற காற்றும், கடல் பழகுதலும் கனவுகள் வராத இரவும் எப்போதும் ‘இன்னொரு பயணமும்’. தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைபோலப் புதிய வாழ்வு, புதிய வீச்சு, புதிய படிமங்கள் என அவருடைய கவிதைகள் இப்போது மென்மையின் குரல் ஒலி. சேரன் \u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165526253819,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/0615861c702847ab40b20cea07e9733f.jpg?v=1705470868"},{"product_id":"theendapadatha-muttham","title":"தீண்டப்படாத முத்தம் | THEENDAPADATHA MUTTHAM","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eபெண் வாசனை வீசும் பூமியிலிருந்து எழுந்துள்ளன இந்தக் கவிதைகள். காதல், காமம், வெஞ்சினம் மூன்றும் அந்நிலத்தின் பருவங்கள். இவற்றை அனுபவிக்கும் மானிட உயிர் ஒன்று பெண் அல்லது ஒடுக்கப்பட்ட ஆண். சமயங்களில் ஈழத்தின் தோற்கடிக்கப்பட்ட இனமாகவும் இருக்கிறது. ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணியின் இதுவரையான கவிதைத் தொகுப்புகளிலிருந்து முன்னோக்கிச் சென்றிருக்கும் கவிதைகளைக் கொண்டது இந்த நான்காம் தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165528219899,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/e491c627809d3e8e7d7585de1e7a4aef.jpg?v=1705470144"},{"product_id":"thinai-mayakkam-allathu","title":"திணைமயக்கம் (அல்லது) நெஞ்சொடு கிளர்தல் | THINAI MAYAKKAM ALLATHU NENJODU KILARTHAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும் நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமானவை. இக்கவிதைகளில் அகமும் புறமும் பிரிய இயலாத நிறங்களின் திணைகளாக வரிகின்றன. அரேபியக் கவிதை வடிவமான கஜல், பசவண்ணாவின் வசனங்கள் ஆகியவற்றையும் நினைவுபடுத்தும் இக்கவிதைகள் மெல்லிய இசையைத் தூவுகின்றன. காமம், அகதி நிலை, போர், காதல், சஞ்சலம், வன்முறை, பிரிவின் வெளி என வியப்பூட்டும் நவீன உள்ளார்ந்த பார்வையை இவை வெளிப்படுத்துகின்றன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165529596155,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/dc5330365c03aab6e1795037eeda343e.jpg?v=1705506268"},{"product_id":"udainthu-ezhum-narumanam","title":"உடைந்து எழும் நறுமணம் | UDAINTHU EZHUM NARUMANAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். நுண்ணிய சிக்கல்களைக் கவனித்து அலுத்துப்போய் மகத்தான எளிமைகளை நோக்கி நகர்ந்துவிட்டிருக்கிறார். வான்நோக்கி ஏங்கும் யானைக்கு ஈசல் கொடுக்கும் இறகு போதும், பறந்து போய்விடும். அத்தகைய ஈசல்களைத் தன் பெர்முடாசின் பாக்கெட்டுகளில் வைத்துள்ளார் கவிஞர் இசை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165533528315,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4d70fab96a6853c0014bfe724b7a4930.jpg?v=1705505233"},{"product_id":"uppu-neer-muthalai","title":"உப்புநீர் முதலை ।UPPU NEER MUTHALAI","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165534478587,"sku":"","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/uppuneer-mudhalai-original-imafe3nwzv8grbfb.webp?v=1708679879"},{"product_id":"velli-sani-puthan-gayiru-viyalan-chevvai","title":"வெள்ளி சனி புதன் ஞாயிறு வியாழன் செவ்வாய் | VELLI SANI PUTHAN GNAYIRU VIYALAN CHEVVAI","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165538803963,"sku":"","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/IMG_20230615_084319_1024x1024_2x_16c92f6b-1a5b-43ca-a710-6b438d97a018.webp?v=1708680167"},{"product_id":"rubayiyath","title":"ருபாயியத் | RUBAYIYATH","description":"","brand":"CREA","offers":[{"title":"Default Title","offer_id":45195324358907,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/Rubaiyat-full.jpg?v=1705760986"},{"product_id":"aeiram-padalgal","title":"ஆயிரம் பாடல்கள் | AYIRAM PADALGAL","description":"","brand":"SURYA LITERATURE","offers":[{"title":"Default Title","offer_id":45196149817595,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/0004008--_500x500_3318b403-1858-4c39-9e28-d63255e87776.jpg?v=1705763980"},{"product_id":"inthakulathil-kal-erinthavargal","title":"இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் | INTHAKULATHIL KAL ERINTHAVARGAL","description":"","brand":"SURYA LITERATURE","offers":[{"title":"Default Title","offer_id":45196150833403,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/837c1d_cf31c557004c427795694a38c7b27d0c_mv2.webp?v=1705764403"},{"product_id":"koncham-theneer-niraya-vanam","title":"கொஞ்சம் தேநீர்; நிறைய வானம்! | KONCHAM THENEER NIRAYA VANAM","description":"","brand":"SURYA LITERATURE","offers":[{"title":"Default Title","offer_id":45196153880827,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/837c1d_2dacfd7d655742619596e6bee8f4c04a_mv2.webp?v=1705921061"},{"product_id":"maha-kavithai","title":"மகா கவிதை | MAHA KAVIDHAI","description":"","brand":"SURYA LITERATURE","offers":[{"title":"Default Title","offer_id":45196153913595,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/SDFBBGHXFGH.jpg?v=1705922535"},{"product_id":"abi-kavithaikal","title":"அபி கவிதைகள் | ABI KAVITHAIKAL","description":"","brand":"ADAIYALAM","offers":[{"title":"Default Title","offer_id":45272706253051,"sku":"","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/abhi-kavithaigal-10015242-550x550h.jpg?v=1707740827"},{"product_id":"palastheena-kavithaigal","title":"பலஸ்தீனக் கவிதைகள் | PALESTHEENA KAVITHAIGAL","description":"","brand":"ADAIYALAM","offers":[{"title":"Default Title","offer_id":45272710480123,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/palastina-kavidhaigal-1-550x550h.jpg?v=1707821595"},{"product_id":"pramil-kavithaigal","title":"பிரமிள் கவிதைகள் | PRAMIL KAVITHAIGAL","description":"","brand":"ADAIYALAM","offers":[{"title":"Default Title","offer_id":45272711135483,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/piramil-kavithaigal-10000082-550x550h.jpg?v=1707823652"},{"product_id":"en-peyar-gipsy","title":"என் பெயர் ஜிப்சி | EN PEYAR GIPSY","description":"","brand":"KADODI","offers":[{"title":"Default Title","offer_id":45289136587003,"sku":"","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/en-peyar-gypsy-10019803-550x550h.jpg?v=1708147978"},{"product_id":"kavignum-kavithaiyum","title":"கவிஞனும் கவிதையும் | KAVIGNUM KAVITHAIYUM","description":"","brand":"DESANTHIRI","offers":[{"title":"Default Title","offer_id":45289273688315,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/kavignan.jpg?v=1708167803"},{"product_id":"kaaha-satthasa-e","title":"காஹா சத்தசஈ | KAAHA SATTHASA E","description":"","brand":"ANNAM","offers":[{"title":"Default Title","offer_id":45349249319163,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/kaahaa-saththasayee_FrontImage_877.jpg?v=1713967878"},{"product_id":"aangalin-kanivana-kavathirku","title":"ஆண்களின் கனிவான கவனத்திற்கு | AANGALIN KANIVAANA GAVANATHIRKU","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதெருவில், பேருந்து நிறுத்தத்தில், வீட்டு முற்றத்தில், மரத்தடியில், சமையலறையில், கடை வாசலில் என எங்கெங்கும் கவிதை சிறு தானியம் போல் சிந்திக் கிடப்பதைக் கவிதைத் தாம்பாளத்தில் திரட்டிக் கொடுக்கிறார் ஜே. மஞ்சுளாதேவி. மனிதநேயம் கசியும் வாழ்வின் தருணங்கள்தான் மஞ்சுளாவின் கவிதைக்கு மூலப்பொருள். வேறு எந்தக் கவிஞரும் தொடாத இந்தக் களம் அவருடைய கவிதைகளின் களியாட்டரங்கம்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e- கவிஞர் சிற்பி\u003c\/span\u003e","brand":"EZHUTHU PRASURAM","offers":[{"title":"Default Title","offer_id":45403500413179,"sku":"","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/Websitebooktemplate_14_1800x1800_c6d50d5e-2e19-4955-991a-cd03681abd27.webp?v=1710590465"}],"url":"https:\/\/www.jayambookcentre.com\/collections\/kavithaigal.oembed?page=9","provider":"Jayam Book Centre","version":"1.0","type":"link"}