{"title":"PERUMAL MURUGAN","description":"","products":[{"product_id":"aalantop-patchi","title":"ஆளண்டாப் பட்சி | AALANTOP PATCHI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475660027,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/395aa6d6727a702f8ee29d38f0f85cd4.jpg?v=1705209574"},{"product_id":"arthanaari-240","title":"அர்த்தநாரி | ARTHANAARI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003e‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483917563,"sku":"","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/9f8a4be32ff647fbc06b585212a9be30.jpg?v=1705297733"},{"product_id":"eruveyil","title":"ஏறுவெயில் | ERUVEYIL","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eநான் எழுதிய முதல் நாவல் ‘ஏறுவெயில்\u0026amp;#39;. இதை எழுதியபோது (1991) எனக்கு வயது இருபத்தைந்து. இப்போது (2016) இதன் வயது இருபத்தைந்து. கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து இயங்க எனக்குக் கடைகாலாக அமைந்தது இந்நாவல். வெயில் உணர்ந்து வெயிலில் திரிந்து வெயிலில் புரண்டு வெயிலோடு உறவாடி வெயில் தாங்கி வளர்ந்த மேனி இது. சிலசமயம் இளவெயில். இளவெயிலில் நீராடிக் களிக்கிறேன். பெரும்பாலும் உச்சிவெயில். உச்சிவெயிலில் பாறையில் வீசப்பட்ட புழுவாய்த் துடிக்கிறேன். வெயில் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. மேகம் மறைக்கும் கணம்கூட இல்லை. இறங்குமுகமும் அதற்கில்லை. ஏறுவெயிலை என் வாழ்வின் குறியீடாகக் காண்கிறேன். என் வாழ்வுக்கு மட்டுமல்லாமல் பொதுச்சமூக வாழ்வுக்கும் குறியீடாக அமைவதுதான் இந்நாவலை இன்னும் உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது போலும்..\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494370555,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/c5c271ef95af1e0dcf1199e9494395dd.jpg?v=1705467638"},{"product_id":"kazhi-mugam","title":"கழிமுகம் | KAZHI MUGAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிக் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும், பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல், புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான தொல்லுறவின் அபேதத்திலிருந்து இருப்பின் பரபரப்பை எதிர்கொள்ளும் எளிய ஒளி கூடும்போது, மகனும் தந்தையும் அவரவர் இடத்தில் காலூன்றியபடியே காலத்தையும் கல்வியையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்புன்னகையின் உக்கிரமே ‘கழிமுகம்’.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165502398715,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/9733f6dc789f6225a10a8639d68f7475.jpg?v=1705728604"},{"product_id":"ketta-varthai-pesuvom","title":"கெட்ட வார்த்தை பேசுவோம் | KETTA VAARTHAI PESUVOM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூக\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e, \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபண்பாட்டு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e, \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமொழி\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e, \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவரலாற்று\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுக்கு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனிதச்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசெயல்பாடுகளின்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎந்தப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபகுதியும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவிலக்காக\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருக்க\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமுடியாது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனித\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவாசனை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமூக்கை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎட்டியதும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇரை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகிட்டியதென\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமகிழும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதேவதைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகதை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅரக்கனைப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபற்றிப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபிரெஞ்சு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவரலாற்றாசிரியர்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமார்க்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபிளாக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகுறிப்பிடுவார்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூகவியல்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வாளர்களும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅப்படித்தான்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருக்க\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவேண்டும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனித\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவாழ்க்கை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதொடர்புடைய\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎதுவாயினும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுத்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதேட்டத்தைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகிளர்த்த\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவேண்டும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தைகளிலிருந்து\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவீசுவதோ\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனிதத்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதுர்வாடை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. ‘\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபேசுவோம்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e' \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇதைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகவனப்படுத்திக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தைகள்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபற்றிய\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுக்குக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகதவு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதிறந்திருக்கிறது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமாள்முருகனை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநினைத்துப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகொள்ளப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபல\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகாரணங்கள்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉண்டு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e. \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்த\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநூலும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅதில்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசேர்த்தி\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165502431483,"sku":"","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/3541aca22d5668d60d1ab630b5664a8e.jpg?v=1705300567"},{"product_id":"kuulamaataari","title":"கூளமாதாரி | KUULAMAATAARI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003e‘கூளமாதாரி’ பண்ணையாட்களாக வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையினூடாக விவரித்துச் செல்கிறது. பதின்பருவத்தினைத் தொட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் இல்லாமை, அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றின் பிடிகளுக்கு உட்பட்டும் உயிரியல்பான அன்பு, காதல், காமம் உள்ளிட்டவற்றின் மலர்ச்சிக்கு ஆட்பட்டும் வளர்கின்றனர். சிறுவயதில் அவர்கள் பெறும் அனுபவங்களும் அடையும் வாழ்க்கைப் பார்வையும் மிகவும் உக்கிரமானவை. பனைகள் ஓங்கிய நிலமும் வெற்று வெளியுமே இதன் களங்கள். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வித ஓவியமெனத் துலங்கும் நிலவெளியின் காட்சிச் சித்திரம். இயற்கை வெறுமனே வருவதில்லை, வாழ்வின் பின்புலம் அது என்னும் தமிழ் மரபின் நீட்சி. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஓராயிரம் கைகளை நீட்டி அரவணைத்துக் காக்கும் இயற்கை உயிர்கொண்டு பாத்திரங்களாக இதில் உருப்பெற்றுள்ளது. மனிதர்களும் ஆடுகளும் இயல்புடன் இதனுள் உலவுகின்றனர். மனித உறவுகளில் பலவித பேதங்கள். அவற்றைவிடவும் மனிதருக்கும் ஆடுகளுக்குமான உறவுகள் அர்த்தம் பொதிந்தவை. இந்நாவலை வாசிப்பது வாழ்வுக்குள் பயணமாகும் அனுபவமாக விளங்குகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165504856315,"sku":"","price":375.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/0a456764b7d8763a637afbc7ab6ec5cf.jpg?v=1705486927"},{"product_id":"maathorupagan","title":"மாதொருபாகன் | MAATHORUPAGAN","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eஇந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கீழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும்.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165505085691,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ae2f30e27ea4a17bf12b8048df67d787.jpg?v=1705296690"},{"product_id":"maayam","title":"மாயம் | MAAYAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165505282299,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/55abd6c813095c30a32973f0d1738134.jpg?v=1705300128"},{"product_id":"manathil-nirkkum-manavargal","title":"மனதில் நிற்கும் மாணவர்கள் | MANATHIL NIRKKUM MANAVARGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஓர் ஆசிரியர் தம் மாணவர்களைக் குறித்து எழுதியுள்ள முன்னோடி நூல். தம்மிடம் பயின்ற மாணவர்களைப் பற்றிப் பெருமாள்முருகன் எழுதிய நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு. அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருபவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திறன், குடும்பச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நுட்பமான பார்வையுடன் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. நம் கல்வி முறை பற்றிய பல்வேறு கோணங்களைப் போகிற போக்கில் சுட்டுச் செல்லும் தெறிப்புகள் நூலெங்கும் விரவியுள்ளன. எளிய மொழிநடையும் சுவையான சம்பவங்களுமாக வாசிப்புத்தன்மை கொண்ட நூல் இது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165506101499,"sku":"","price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/89941ff15c95d505adfe2d158bc9b297.jpg?v=1705726304"},{"product_id":"mayanaththil-nirkkum-maram","title":"மயானத்தில் நிற்கும் மரம்  | MAYANATHTHIL NIRKKUM MARAM","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507510523,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/61IdMPGGopL._SY425.jpg?v=1708676369"},{"product_id":"mayirdhan-prachanaiya-katturai","title":"மயிர்தான் பிரச்சினையா? | MAYIRDHAN PRACHANAIYA?","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநம் கல்விமுறையில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. கல்வி இன்று சேவையாக இல்லை; தொழிலாக இருக்கிறது. கல்வி பற்றிய புனித பிம்பங்கள் உதிர்ந்துவிட்டன. இச்சூழலில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை வெளியுலகப் பார்வைக்கு வைக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. மாணவர்களை நோக்கியதாகப் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, ஆசிரிய அணுகுமுறை, அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் இருக்க வேண்டும் என்னும் பார்வையை அடிப்படையாகக் கொண்ட இவை வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507576059,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/fef5f2c67bf7c571d4d04f87043bcbff.jpg?v=1705725895"},{"product_id":"nedu-neram","title":"நெடுநேரம் | NEDU NERAM","description":"\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eபொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eகாதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது.\u003c\/p\u003e\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஇன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510066427,"sku":"","price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/bf49368816a99462523e8561a7660a9b.jpg?v=1705675630"},{"product_id":"nilamum-nizhalum-k","title":"நிலமும் நிழலும் | NILAMUM NIZHALUM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகுடும்பம் குடும்பமாகவும் பலவயதுக் குழுக்களாகவும் திரையரங்குக்குச் சென்ற காலம் இனி இல்லை. சந்தை நாள், திருவிழா நாள், விசேச நாள் என்பவை திரைப்படம் பார்ப்பதற்கானவையாக இருந்தது போய் விடுமுறை நாட்கள் என்னும் நிலை உருவாகிவிட்டது. சாவகாசமாகப் படம் பார்த்து அசை போடும் காலமும் இல்லை. திரளாகப் படம் பார்க்கும் அனுபவம் தகர்ந்து தனிமனித அந்தரங்கமாகப் படம் பார்ப்பதும் மாறிவருகிறதோ எனத் தோன்றுகின்றது. எனினும் வாழ்வில் திரைப்படத்திற்கான இடம் இன்னும் பெருமளவில் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் திரைப்படம் பார்த்தல் தொடர்பாகத் தேர்ந்தெடுத்துப் பேசிய என் அனுபவங்கள் பதிவு, சுயசரிதம், அபிப்ராயங்கள் எல்லாம் கலந்த கலவையாக இந்நூலில் அமைந்திருக்கின்றன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165511147771,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/d19b04c92c2c0869f5ba2795a9a7938c.jpg?v=1705483574"},{"product_id":"nizhal-mutram","title":"நிழல்முற்றம் | NIZHAL MUTRAM","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eகளம் சார்ந்த கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. திரைப்படங்களைக் காண்பதற்கான ஒரே வழிமுறையாகத் திரையரங்கங்கள் இருந்த காலத்துத் திரையரங்க வளாகம் ஒன்றைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள ‘நிழல் முற்றம்\u0026amp;#39; என்னும் நாவலின் களம் தமிழ்ப் புனைவுலகிற்குப்புதியது. எழுதி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மங்காமல் ஒளிவீசும் புதுமை இது. சிறு நகரம் ஒன்றின் திரையரங்க வளாகத்தில் புழங்கும் மனிதர்களும் அங்கு நிகழும் வாழ்வின் சலனங்களும் ஒரு காலகட்டத்தையும் குறிப்பிட்ட இடத்தையும் சார்ந்த தமிழ் வாழ்க்கையின் குறுவடிவமாகவே தோற்றம் கொள்கின்றனர். மாய நிழல்கள் அசையும் திரையைச் சுற்றிலும் இயங்கும் யதார்த்த வாழ்வு ஓராயிரம் திரைப்படங்களுக்கான கருக்களைச் சுமந்திருப்பதை இந்தச் சிறு நாவல் காட்டுகிறது.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165511377147,"sku":"","price":375.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/568d11d6c62b9c5c3008dabe84312170.jpg?v=1705674473"},{"product_id":"nizhal-muttrathu-ninaivugal","title":"நிழல்முற்றத்து நினைவுகள் | NIZHALMUTRATHU NINAIVUGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசுயவரலாற்றுத் தன்மை கொண்ட எழுத்தில் சுயத்தைக் குறைத்து அதை வரலாற்றில் வைத்துப் பேசுவது எப்படி என்பதற்கு பொருமாள்முருகனின் இந்த நூல் முன் உதாரணமாகும். இயல்பிலேயே அவர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பார்வையைப் பெற்றிருப்பதால் சுயமையின்மை சுலபமாக அவருக்குக் கைவந்திருக்கிறது. இந்த நூல் முழுவதும் அவர் இருக்கிறார். ஆனல் அவர் கவனப்படுத்திய எண்ணற்ற விஷயங்களில் கலந்து பரவியிருக்கிறார் என்பதுடன் அவற்றால் உருவாக்கப்பட்ட சுயத்தைக் கொண்டவராக இருக்கிறார். சுயவரலாற்று எழுத்துக்களை மேற்கொள்ளும் யாருக்கும் பெருமாள்முருகனிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165511442683,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/2982d397e463f85187578a8ebfbeca7f.jpg?v=1705294833"},{"product_id":"pathipugal-marupathipugal","title":"பதிப்புகள் மறுபதிப்புகள் | PATHIPUGAL MARUPATHIPUGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநான் எழுதியவற்றில் மிகக் குறைவான படிகள் விற்பனையான நூல் இது. ஆனால் அதிகமாக விற்றிருக்க வேண்டிய நூல் இதுதான் என நினைக்கிறேன். கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரிய துறை பதிப்பு எனக் கருதிப் பொதுவாசகர்கள் நான் எழுதியவற்றில் மிகக் குறைவான படிகள் விற்பனையான நூல் இது. ஆனால் அதிகமாக விற்றிருக்க வேண்டிய நூல் இதுதான் என நினைக்கிறேன். கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உரிய துறை பதிப்பு எனக் கருதிப் பொதுவாசகர்கள் புறக்கணித்திருப்பார்களோ என எண்ணியதுண்டு. ஆனால் என் மொழிநடையும் ஆய்வை விவரிக்கும் விதமும் கல்வித்துறை ஆய்வுகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. பொதுவாசகரின் கவனத்தில் பதிப்புணர்வை இருத்த வேண்டும் என்பதே என் நோக்கம். நூல்களைத் தேடித் தேடி வாங்கி வாசிக்கும் வாசகர் நல்ல பதிப்புகளை நாடிச் சென்றால் அவர்களின் வாசிப்பு எளிமையானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும். அதற்கு உந்தித் தள்ளும் கட்டுரைகள் இவை எனத் தாராளமாகச் சொல்ல முடியும். பெருமாள்முருகன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165515571451,"sku":"","price":195.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/d3d467bd1fe4af942afae3442890d272.jpg?v=1705672712"},{"product_id":"pookuzhi","title":"பூக்குழி | POOKUZHI","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eகொங்கு வட்டாரப் பின்புலத்தில் கதைகளை நிகழ்த்திக் காட்டும் பெருமாள்முருகன், ‘பூக்குழி\u0026amp;#39; நாவலில் சாதிய முரண் குறித்த உரையாடலை முன்வைக்கிகிறார். இந்நாவலை அவர் சாதி மீறித் திருமணம் செய்து ‘பலி’யான தருமபுரி இளவரசனுக்குச் சமர்ப்பித்துள்ளார். இந்த நாவலைப் படிக்கும் யாருக்கும் தலித், தலித்தல்லாதோர் என்கிற பின்புலத்தில் கதை எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ணவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் கதை சாதியின் முரண்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி பற்றியதாக உள்ளது. புராணங்கள், இதிகாசங்கள், மநு போன்ற புத்தகங்களிலிருந்து சாதி உருவாகி இருக்கிறதென்று சொல்லி, தங்களுக்கும் சாதிக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று இடைநிலைச் சாதிகள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள முனையக்கூடும். இந்நாவல் சாதிப் பிரச்சினைகளுக்கு ஆதிக்கச் சாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது. இடைநிலைச் சாதிகளின் சாதி மனோபாவத்தை இப்பிரதி வெளிச்சமிடுகிறது. சுய விமர்சனத்திலிருந்தே மாற்றங்கள் உருவாகும். அப்படியான விமர்சனத்தை இந்நாவல் வைக்கிறது. மௌனமாய் இருக்கும் குளத்தில் பெருமாள்முருகனால் எறியப்பட்ட கல்லுக்கு, சலனத்தை உண்டாக்கும் ஆற்றல் இருப்பதாகச் சொல்ல முடிகிறது.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165517013243,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/dfbd4294234589157b8f423c4acf9a8a.jpg?v=1705670718"},{"product_id":"poonatchi-or-oru-vellattin-kadhai","title":"பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | POONACHI ALLATHU ORU VELLATIN KADHAI","description":"\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபுதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சினை தராத அப்பிராணி ஆடு. ஆட்டில் இரண்டு வகை. வெள்ளாடு, செம்மறி. சுறுசுறுப்பானது வெள்ளாடு. கதையில் ஓட்டம் இருக்க வேண்டும். அதற்கு லாயக்கு வெள்ளாடுதான். இரண்டாண்டுகளுக்குப் பின் இவ்விதமாக உருவான எனது பத்தாவது நாவல் ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை. \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e’Writer, Poet, Critic Perumal Murugan’s first novel after his self imposed break, following the moral policing and assault on him and his works. Perumal Murugan says the assault imposed a fear to write, to write about men or gods or demons. So he chose to write about animals for now. And of the five animals men know intimately, dog and cat are for poetry, cow and pig can’t be written about, hence that is remaining in only the Goat. Goat being a harmless animal is filled with an enthusiasm. That enthusiasm is translated into flow of the narrative. Thus born the tenth novel of Perumal murugan, the story of a goat or Poonaacchi.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165517865211,"sku":"","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/32f48aea44be869ca420a4d266e25cf1.jpg?v=1705298402"},{"product_id":"sathiyum-naanum","title":"சாதியும் நானும் | SAATHIYUM NAANUM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும் அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. கூச்சத்தால் அல்லது அச்சத்தால் தன்மையைப் படர்க்கையாக்கிப் பதுங்கிக்கொண்ட பதிவுகளும் உண்டு. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுய வரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன. எழுதுவதற்குப் பூரண சுதந்திரம் கொடுத்தும் சாதி ஆதரவுக் குரல் எந்தக் கட்டுரையிலும் வெளிப்படவில்லை என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய குறைந்தபட்ச நம்பிக்கையைத் தருகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165522190587,"sku":"","price":330.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/fd075f2656d203c962bf647a5b92bddc.jpg?v=1705666785"},{"product_id":"seththumaan-kathaigal","title":"சேத்துமான் கதைகள் | SETHTHUMAAN KATHAIGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. கொங்கு மண்டலத்தின் யதார்த்தம் திரைப்படங்களில் வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நிலவும் சாதியின் கோரத்தன்மையை அதன் யதார்த்தத்துடன் பெருமாள் முருகனின் கதைகள் வழியாகவே நான் அதிகம் புரிந்துகொண்டேன்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e‘வறுகறி', 'மாப்பு குடுக்கோணுஞ் சாமீ' ஆகிய கதைகளைத் திரைப்படமாக உருமாற்றியதில் பெருமாள் முருகனின் பங்கும் அளப்பரியது.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசிறுகதைகளில் இடம்பெறும் உரையாடல்களை, விளக்கங்களை, மனிதர்களின் எண்ணவோட்டங்களைக் காட்சியாக மாற்றுவதென்பது சவாலானது. அது மிக லாகவமாகப் பெருமாள்முருகனுக்குக் கைகூடியிருக்கிறது சிறுகதையாகப் படித்தபோதிருந்த அதே அதிர்வு திரைக்கதையாகவும் படிக்கும்போது ஏற்படுவதென்பது அரிது. பெருமாள் முருகனும் தமிழும் அதை அழகாகச் செய்திருந்தனர். திரைமொழியிலும் அதே அதிர்வை இயக்குநர் தமிழ் ஏற்படுத்திக் கொடுக்க இந்த முப்பரிமாணத் தாக்கம் ஒரு இனிய அனுபவமாக எனக்கு இருந்தது. சேத்துமான் திரைப்படம் நீலம் புரொடக் ஷன்ஸுக்குப் பெரிய நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165522288891,"sku":"","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/cad0b9825f90073276fd1a52753b5845.jpg?v=1705666699"},{"product_id":"tamil-sirukadhai-varalarum","title":"தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும் | TAMIL SIRUKADHAI VARALARUM VIMARSANAMUM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசங்க காலத்திலிருந்து தொகுப்பைக் கலையாகப் பேணும் மரபு நம்முடையது என மார்தட்டுகிறோம். ஒவ்வோர் ஆண்டும் ஒருபொருள் தொடர்பாக வெளியான கட்டுரைகளைக் காட்டும் பட்டியல்கூட நம்மிடமில்லை. இத்தகைய இல்லாமைகளை உணர்ந்து அவற்றை நிறைவு செய்ய முனையும் தனிமனித ஆர்வங்கள் அவ்வப்போது சில நற்செயல்களை நிகழ்த்திவிடுவதுண்டு. அவ்வகையான நற்செயலாகச் சிறுகதை தொடர்பான பல ஆவணங்களையும் கட்டுரைகளையும் வாசித்துச் சுப்பிரமணி இரமேஷ் இந்நூலை உருவாக்கியுள்ளார். சிறுகதை வரலாற்றை அறிவதற்கோர் கருவியாக விளங்கும் தன்மை பெற்றுள்ளதோடு, அதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் உந்துதலையும் இந்நூல் வழங்கும் என நம்புகிறேன். - பெருமாள்முருகன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165525795067,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/81a657e55d029050db6010d9c91afcd5.jpg?v=1705472584"},{"product_id":"thondra-thunai","title":"தோன்றாத் துணை | THONDRA THUNAI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநகர வாழ்க்கையிலிருந்து தேவையானவற்றைத் தன்னோடு இருத்திக்கொண்டு, புதிதாக அமைந்த கிராம வாழ்க்கையில் தன்னை இரண்டறப் பொருத்திக்கொண்டு, நேரிட்ட பல சோதனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டு வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தின் தாயை மாறாத சித்திரமாகக் காட்டுகிறது இந்நூல்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165530349819,"sku":"","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/1890719477b4e7e46edd3225a3eef97e.jpg?v=1705469498"},{"product_id":"vaankuruviyin-koodu","title":"வான்குருவியின் கூடு | VAANKURUVIYIN KOODU","description":"\u003cp\u003eVAANKURUVIYIN KOODU -\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165536280827,"sku":"","price":140.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a560bc622a59a092146835c20ab56ef1.jpg?v=1705504838"}],"url":"https:\/\/www.jayambookcentre.com\/collections\/perumal-murugan.oembed","provider":"Jayam Book Centre","version":"1.0","type":"link"}