Skip to product information
1 of 1

Product Description

மரமல்லி | MARAMALLI

மரமல்லி | MARAMALLI

Author - PON. VIMALA

Language - TAMIL

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Sold out
Shipping calculated at checkout.
பெண் எனும் தன்னிலையின் இருப்பு பதிவு செய்யும் கிராம மற்றும் நகரப் பின்னணியிலான கதைகளாக இவை இருக்கின்றன. மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான வாழ்வியல் தருணங்களை அப்போது மானுட உறவுகளில் உருவாகும் விரிசல்களை, விலகல்களைப் பேசும் கதைகளாகவும் இருக்கின்றன. வாழ்வியல் சிக்கல்களின்போது மனித மனதில் உருவாகும் தத்தளிப்பு, ஆவேசம், கோபம், வன்மம், பெருந்தன்மை, தியாகம் போன்ற குணரூப விநோதங்களை நுட்பமாகப் பதிவு செய்கின்றன.  விமலாவுக்கு ஆற்றொழுங்காய் கதை சொல்ல வருகிறது. காட்சிகளின் விவரணைகளில் இருக்கும் கலை நுணுக்கம் கதையோட்டத்தில் இருக்கும் தெளிவு, பூடகமற்ற எதார்த்தமான மொழியழகு வாசக மனதுக்கு நெருக்கமான கதை அனுபவத்தைத் தருகின்றன.

இளங்கோ கிருஷ்ணன்
View full details