1
           / 
          of
          1
        
        
      Product Description
ஆணவக் கொலைகளின் காலம் | AANAVA KOLAIKALIN KAALAM
ஆணவக் கொலைகளின் காலம் | AANAVA KOLAIKALIN KAALAM
 
  Author - ஸ்டாலின் ராஜாங்கம்
  
          
  
    Publisher -  KALACHUVADU
  
            
    
Language - தமிழ்
Regular price
        
          Rs. 225.00
        
    
        Regular price
        
          
            
              
            
          
        Sale price
      
        Rs. 225.00
      
    
    
      Unit price
      
        
        /
         per 
        
        
      
    
  Shipping calculated at checkout.
                
Couldn't load pickup availability
Share
Low stock
                    AANAVA KOLAIKALIN KAALAM - அதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவு கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன. சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டியிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் நீடிக்கும் அரசியல் மௌனத்திற்கான காரணங்களையும் இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இன்று நமது அறிவுச்சூழலில் மேலோங்கியிருக்கும் - 'குற்றச்சாட்டு x தீர்வு' என முரண்பட்டு இயங்கும் விவாதமற்ற போக்குகளிலிருந்து விலகி கூர்மையான கேள்விகளையும் காரணங்களையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. கண்டனம், ஆவேசம், அடையாளம்சார் முழக்கம் ஆகிய அரசியல்வாதிகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கடந்து இக்கொலைகளை விரிந்த பின்புலத்தில் வைத்து களநிலவரத்தையும் அறிவுலகையும் புரிந்துகொள்வதன் அத்தியாவசியத்தை வலியுறுத்துகிறது. இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் பரவலான கவனிப்பையும் விவாதத்தையும் பெற்ற கட்டுரைகளோடு சினிமா, புனைகதை, முகநூல் பதிவு, உண்மையறியும் அறிக்கை, நீதிமன்ற வழிகாட்டுதல் குறிப்பு ஆகியவற்றைத் தொட்டுப் புதிதாக எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. ஆணவக் கொலை தொடர்பான விவாதத்திற்கு மட்டுமல்ல அதற்கான ஆவணரீதியான கையளிப்பாகவும் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது-.
                  
            View full details
            
          
        
 
              