Product Description
ஏறுவெயில் | ERUVEYIL
ஏறுவெயில் | ERUVEYIL
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Out of stock
நான் எழுதிய முதல் நாவல் 'ஏறுவெயில்'. இதை எழுதியபோது (1991) எனக்கு வயது இருபத்தைந்து. இப்போது (2016) இதன் வயது இருபத்தைந்து. கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து இயங்க எனக்குக் கடையாக அமைந்தது இந்நாவல். வெயில் உணர்ந்து வெயிலில் திரிந்து வெயிலில் புரண்டு வெயிலோடு உறவாடி வெயில் தாங்கி வளர்ந்த மேனி இது. சிலசமயம் இளவெயில். இளவெயிலில் நீராடிக் களிக்கிறேன். பெரும்பாலும் உச்சிவெயில். உச்சிவெயிலில் பாறையில் வீசப்பட்ட புழுவாய்த் துடிக்கிறேன். வெயில் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. மேகம் மறைக்கும் கணம்கூட இல்லை. இறங்குமுகமும் அதற்கில்லை. ஏறுவெயிலை என் வாழ்வின் குறியீடாகக் காண்கிறேன். என் வாழ்வுக்கு மட்டுமல்ல பொதுச்சமூக வாழ்வுக்கும் குறியீடாக அமைவதுதான் இந்நாவலை இந்த உயிர்ப்புடன் இருக்கச் செய்கிறது போலும்..
