Product Description
கரமாஸவ் சகோதரர்கள் | KARAMAASAV SAKOTHARARKALGAL
கரமாஸவ் சகோதரர்கள் | KARAMAASAV SAKOTHARARKALGAL
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Out of stock
KARAMAASAV SAKOTHARARKALGAL - உலகின் மகத்தான படைப்பாகிய 'கரமாஸவ் சகோதரர்கள்' நாவல் அதன் மூலமாக ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர் பெற்றது. ரஷ்யாவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அம்மொழியையும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து உணர்ந்தவர் மொழிபெயர்ப்பாளர். மூலமொழிக்கு நெருக்கமான தொடரமைப்புகளைப் பயன்படுத்தி நாவலின் சாரமான விவாதப் பகுதிகளையும் பைபிள் மேற்கோள்களையும் ரஷ்ய இலக்கியத் தொடர்களையும் மிகுந்த கவனத்துடன் மொழிபெயர்ப்பாளர் தமிழுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். அசைவுகளையும் சொற்களையும் உளவியல் அம்சம் பொருந்தியிருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் பாத்திர உருவாக்கங்கள் தமிழுக்கு இயைந்து வருகின்றன. வாழ்வைப் பரிசீலிக்கத் தூண்டும் அவரது ஒவ்வொரு வரியையும் நுட்பமாக உள்வாங்கி சாரத்தைப் பிடித்திருக்கும் அரிய மொழிபெயர்ப்பு இது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான இதைத் தமிழின் மரபான சொல்லாட்சிகளும் நவீனச் சொற்களும் கலந்துவரும் வகையில் உருவாக்கியிருப்பதன் பொருத்தத்தை வாசிப்பு தெளிவாக உணர்த்தும்.
இந்தப் புத்தகம் தஸ்தாயெவ்ஸ்கியின் உன்னதமான நாவலான 'தி கரமசோவ் பிரதர்ஸ்' என்பதன் மொழிபெயர்ப்பு. ஆசிரியர் அரும்பு சுப்ரமணியன் பல ஆண்டுகளாக ரஷ்யாவில் வாழ்ந்து மொழி, நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றார். அசல் ரஷ்ய பதிப்பில் இருந்து தமிழில் இதுவே முதல் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பை மூலத்துடன் முடிந்தவரை நெருக்கமாகச் சீரமைப்பதில் ஆசிரியர் மிகுந்த அக்கறை எடுத்துள்ளார்.
