Product Description
கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு. கிட்டதட்ட ஆனைத்தையும் பத்திரிய ஒரு சுறுக்கமான வர்
கிட்டத்தட்ட அனைத்தையும் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு. கிட்டதட்ட ஆனைத்தையும் பத்திரிய ஒரு சுறுக்கமான வர்
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் நூல்!
பில் பிரைசன் தன்னைத் தயக்கத்துடன்கூடிய ஓர் ஊர்சுற்றி என்று கூறிக் கொள்கிறார். ஆனால் அவர் தன் வீட்டில் அடைந்து கிடக்கும்போதுகூட, தன்னைச் சுற்றி இருக்கின்ற உலகைக் குறித்த ஆர்வக் குறுகுறுப்பை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பிரபஞ்சப் பெருவெடிப்பிலிருந்து மனித நாகரிகத்தின் எழுச்சிவரை என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதைப் பற்றிய அவருடைய பிரம்மாண்டமான தேடலில் இருந்து உதயமானதுதான் இந்நூல்.
பெயரைச் சொன்னாலே நமக்கு அலுப்பையும் ஆயாசத்தையும் ஏற்படுத்துகின்ற ஆய்வுகள் இயற்பியல், உயிர்வேதியியல், கனிமவியல் போன்ற அறிவியல் பிரிவுகள் சார்ந்த கடினமான விஷயங்களை எடுத்துக்கொள்வது, அறிவியல் ஒருபோதும் சுவாரசியமாக இருக்காது என்பது உறுதியாக நம்புகின்ற அன்பர்களுக்கும் சுவாரசியமூட்டுகின்ற விதத்திலும் அவற்றை எப்படிக் கொடுப்பது என்ற சவாலை பில் பிரைசன் இந்நூலில் சமாளித்துள்ள விதத்தைக் கண்டு நீங்கள் மலைத்துப் போவீர்கள்.
அடடா, இந்நூலை மட்டும் நான் இளமையிலேயே படித்திருந்தால், கண்டிப்பாக ஓர் அறிவியலறிஞராக ஆகியிருப்பேன் என்ற எண்ணம் வாசகர்களுக்கு பலருக்கும் ஏற்படும் என்பது உறுதி. அதுவே, எதைப் படிப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் கட்டத்தில் நீங்கள் இருந்தால், நீங்கள் கண்டிப்பாக அறிவியலில் மூழ்கி முத்தெடுக்க முனைவீர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
