Product Description
கிழக்கும் மேற்கும் | KIZHAKKUM MERKKUM
கிழக்கும் மேற்கும் | KIZHAKKUM MERKKUM
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம். இளையோருக்கு, குறிப்பாகக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வாசிப்புக்கான நூலைத் தாண்டி, வழிகாட்டியாகவும் அமையும்.
அணிந்துரையில் சமஸ்
சீனாவின் வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் முன்னுதாரணம் இல்லாதவை. இவை சீனாவின் ஒரு முகம். யதேச்சதிகாரமும் மேலாதிக்கமும் இன்னொரு முகம். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகள் இந்த இரண்டு முகங்களையும் படம்பிடிக்கின்றன.
ஹாங்காங்கின் சுயாட்சியையும் தைவானின் எழுச்சியையும் கலங்கிக் கிடக்கும் தென் சீனக் கடலையும் வரலாற்றுக்கு முகம்கொடுக்க மறுக்கும் ஜப்பானையும் கிழக்காசியக் கட்டுரைகள் பேசுகின்றன. அகதிகள் ஆக முடியாத ஈழத் தமிழர்களும், எவராலும் கவனிக்கப்படாத பர்மியத் தமிழர்களும் நூலில் இடம்பெறுகிறார்கள். உக்ரைன் போரின் நதிமூலமும் இந்திய - சீன எல்லைச் சிக்கலும் விரிவாகப் பேசப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவின் பகல் வெளிச்ச மாற்றமும் அமெரிக்க ஜனநாயகத்தின் போதனைகளும் தமிழில் அதிகம் பேசப்படாத பன்னாட்டுப் பிரச்சினைகள் பலவும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
