Product Description
பொன்னகரம் | PONNAGARAM
பொன்னகரம் | PONNAGARAM
Language - தமிழ்
Couldn't load pickup availability
Share
Low stock
பொன்னகரம் - மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடும் நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களின் பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறது. இந்தச் சாம்பல் நிற உலகில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. நகரத்தின் வளர்ச்சிப் பசி தின்று தீர்த்த அந்த உலகத்தின் யதார்த்தங்களையும் விழுமியங்களையும் தேடிச் சென்னையின் சந்துகளில் நம்மைப் பயணிக்க வைக்கிறது. இதில் வசிப்பவர்கள் சென்னையின் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். குற்றங்களும் உதிரித் தொழில்களும் மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கை. அவர்களுக்கும் முன்னேற வேண்டும் என்ற ஆசை உண்டு, கடவுள்கள் உண்டு, உறவுகளும் லட்சியங்களும் உண்டு. 'பொன்னகரம்' வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொருத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிறப் புகைக் கூட்டத்தை விலக்கி அந்த ஊரின் தரிசனத்தை அரவிந்தன் காட்டுகிறார். உங்களை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்நாவல் ஒரு கட்டத்தில் உங்களையும் அந்த உலகத்தின் கதாபாத்திரங்களாக மாற்றிவிடலாம்.
பொன்னகரம், பலரும் அறியாத சென்னையை சித்தரித்து, வடசென்னையின் சாம்பல் நிறப் பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். இந்த உலக விதிகள் அவர்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். நாவல் அதன் கதாநாயகர்களின் நியாயங்களையும் நல்லொழுக்கங்களையும் அவர்களின் கண்ணோட்டத்தில் சித்தரிக்கிறது. யார் யார், அவர்கள் ஏன் 'குற்றவாளிகள்', 'குற்றம்' என்றால் என்ன என்று கேள்வி எழுப்புகிறது. வளர்ச்சிப் பசி நகரத்தால் விழுங்கும் யதார்த்தம் மற்றும் விழுமியங்களைப் பற்றிய பேச்சுக்கள், 'வளர்ச்சிக்கு' விலையாக உயிரை இழந்த மக்களின் கடவுள்கள், லட்சியங்கள், கனவுகள் பற்றிய பேச்சுகள், சென்னையின் சிக்கலான பாதைகள் வழியாக ஒரு பயணத்தில் நம்மை அழைத்துச் செல்கிறது. அரவிந்தன் தனது இரண்டாவது நாவலில் பொன்னகரம் வழியாக நம்மை அழைத்துச் செல்கிறார், அதைச் சுற்றியுள்ள சாம்பல் மேகங்களைக் கடந்து செல்கிறார். வெறும் பயணத்தை விட, பொன்னகரத்தின் இன்னொரு பாத்திரமாக வாசகனை உணர வைக்கிறது.
